/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நெடுங்குன்றம் ஊராட்சியில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
/
நெடுங்குன்றம் ஊராட்சியில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
நெடுங்குன்றம் ஊராட்சியில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
நெடுங்குன்றம் ஊராட்சியில் 47 ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
ADDED : அக் 20, 2024 12:21 AM

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், நெடுங்குன்றம் ஊராட்சி புத்தூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து, அதில் 47 வீடுகள் கட்டப்பட்டு, 47 குடும்பத்தினர் வசித்து வந்தனர்.
அந்த இடத்தில் நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை பராமரிப்பு பணி துவங்க இருப்பதால், அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, நெடுஞ்சாலை துறை சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அப்பகுதியில் வசிப்போர் மாற்று இடம் தரவேண்டும் என, கோரிக்கை வைத்தனர்.
அதன்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக, 1,266 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டடங்கள் முருகமங்கலம் பகுதியில் கட்டப்பட்டு இருந்தது.
அதில், இப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பு வாசிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு குடியேறாமல், தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வசித்து வந்தனர்.
இதனால், நெடுஞ்சாலைத்துறையினர் புகாரின் அடிப்படையில், மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, வண்டலூர் தாசில்தார் முன்னிலையில் நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்புகளை துண்டித்து, பொக்லைன் இயந்திரம் வாயிலாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலையூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதால், அவர்கள் பிரச்னை ஏதும் செய்யவில்லை.