/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அகற்றம்
/
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள் அகற்றம்
ADDED : டிச 11, 2024 09:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தண்டி:சென்னை மாவட்டம், உத்தண்டி முதல் செங்கல்பட்டு மாவட்டம் கானத்துார் வரை, கடற்கரை பகுதியில், புயலுக்கு பின் ஐந்து ஆமைகள், அடுத்தடுத்த நாட்களில் இறந்து கரை ஒதுங்கின.
அவற்றை உடனே அகற்ற வேண்டும் என, மீனவர்கள், நடை பயிற்சி செய்வோர், வேளச்சேரி மற்றும் திருப்போரூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். யார் அகற்றுவது என்ற எல்லை பிரச்னையால், ஒரு வாரம் ஆகியும் ஆமைகள் அகற்றப்படாமல் துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த வனத்துறை ஊழியர்களும், இறந்த ஆமைகளை அகற்றினர். இதனால், மீனவர்கள், நடைபயிற்சி செய்வோர் நிம்மதி அடைந்தனர்.