/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்
/
சாலையில் சாய்ந்த மரங்கள் அகற்றம்
ADDED : ஆக 19, 2025 12:12 AM

செங்கல்பட்டு,செங்கல்பட்டில், கனமழையால் சாலையில் சாய்ந்த மரங்களால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதிகளான மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவில், பரனுார், காட்டாங்கொளத்துார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை துவங்கி நள்ளிரவு வரை, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இதில், முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
செங்கல்பட்டு அடுத்த வேண்பாக்கத்தில், சாலையோரம் இருந்த கல்யாண முருங்கை மரம் வேருடன் பெயர்ந்து, சாலை நடுவே விழுந்தது. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மரத்தை வெட்டி அகற்றி, போக்குவரத்தை சரி செய்தனர்.
செங்கல்பட்டு அருகே ஆப்பூரில், மின் கம்பிகள் மீது சீமை கருவேல மரம் முறிந்து விழுந்ததால், நேற்று முன்தினம் இரவு முழுதும் திருக்கச்சூர், ஆப்பூர், தாசரி குன்னத்துார் உள்ளிட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது.
நேற்று காலை, சீமை கருவேல மரத்தை வெட்டி அகற்றி, மின் கம்பிகளை மின் வாரிய ஊழியர்கள் சீரமைத்தனர்.