/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மண்ணிவாக்கம் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்
/
மண்ணிவாக்கம் கோவிலில் புனரமைப்பு பணி துவக்கம்
ADDED : ஜூலை 13, 2025 12:18 AM

மண்ணிவாக்கம்:மண்ணிவாக்கம், மண்ணீஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகளை முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் துவக்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் தாலுகா, மண்ணிவாக்கம் ஊராட்சியில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானமண்ணீஸ்வரர் கோவில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களை புனரமைக்க, 125 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், சட்டசபையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
அதன்படி அதற்கான பணிகளை 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இதில், மண்ணிவாக்கம் ஊராட்சியில் உள்ள மண்ணீஸ்வரர் கோவிலுக்கு 45.20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, புனரமைப்பு பணி துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன், செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி, மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.