/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
யோக ஹயக்ரீவர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
/
யோக ஹயக்ரீவர் கோவிலில் திருப்பணிகள் மும்முரம்
ADDED : மார் 18, 2025 12:32 AM

சிங்கபெருமாள் கோவில்; சிங்கபெருமாள் கோவில் அடுத்த செட்டிப்புண்ணியம் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமையான தேவநாதபெருமாள், யோக ஹயக்ரீவர் - செண்பகவல்லி தாயார் கோவில் உள்ளது.
இங்கு, ராமர் - சீதாதேவிக்கு தனியாக சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. கல்வி கடவுள் யோக ஹயக்ரீவர் என்பதால், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
தேர்வு நேரங்களில், மாணவர்களுக்கு தனியாக சிறப்பு யாகம் நடத்தப்படுவது, கோவிலின் தனிச் சிறப்பு.
இக்கோவிலில் திருப்பணிகள் செய்ய, கடந்த 2023ம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு, உத்சவரை தனியாக வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தொடர்ந்து, உபயதாரர்கள் நிதி வாயிலாக, திருப்பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரும் மே மாதம் கும்பாபிஷேகம் நடத்தும் வகையில், பணிகள் மும்முரமாக நடந்து வருவதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.