/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
காட்டுதேவாத்துார் ஏரியில் உடைந்த மதகு சீரமைப்பு
/
காட்டுதேவாத்துார் ஏரியில் உடைந்த மதகு சீரமைப்பு
ADDED : ஜன 21, 2024 05:30 AM

சித்தாமூர்: சித்தாமூர் அருகே காட்டுதேவாத்துார் கிராமத்தில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரி உள்ளது.
சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக, ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்ததால், மண் அரிப்பு ஏற்பட்டு, மதகு பகுதி உடைந்து தண்ணீர் வெளியேறியது.
இதையடுத்து, பொதுப்பணித்துறை மூலமாக மரக்கட்டைகள் கட்டி, அதன் மீது மணல் மூட்டைகள் அடுக்கி மதகு உடைப்பு சீரமைக்கப்பட்டது.
இதுகுறித்து, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கவிதா கூறியதாவது:-
கனமழையால் காட்டுதேவாத்துார் ஏரி மதகுப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதி, குடியிருப்புப் பகுதியில் இருந்து 1.5 கி.மீ., துாரத்தில் உள்ளது.
வயல்வெளி முழுதும் பயிரிடப்பட்டு உள்ளதால், உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு பொக்லைன் இயந்திரம் செல்ல வாய்ப்பு இல்லை. மற்ற வாகனங்கள் செல்லவும் வழி இல்லை.
இந்நிலையில், தற்போது 2,000 மணல் மூட்டைகள் மற்றும் 5 டன் மரக்கட்டைகள் கொண்டு, மதகுப் பகுதி சீரமைக்கப்பட்டு உள்ளது.

