/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குப்பை தொட்டி வைக்க கோரிக்கை
/
குப்பை தொட்டி வைக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2026 04:41 AM

கூவத்துார்:நெற்குணப்பட்டு ஊராட்சியில் குப்பைகள் காற்றில் பரவுவதை தடுக்க குப்பை தொட்டி வைக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெற்குணப்பட்டு ஊராட்சி, வீரராகவபுரத்தில், கங்கையம்மன் கோவில் தெரு, முத்துமாரியம்மன் கோவில் தெருவில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இங்குள்ளவர்கள் குப்பை கொட்டுவதற்கு வசதியாக, ஊராட்சி சார்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டது. கடந்த ஓராண்டாக, குப்பை தொட்டி பழுதடைந்துள்ளதால், குப்பைகளை கொட்ட முடியாமல், மக்கள் கீழே கொட்டுகின்றனர். துாய்மை பணியாளர்கள் குப்பைகளை எரித்து வந்தாலும், காற்றடிக்கும் நேரங்களிலும், நாய்கள் குப்பைகளை கிளறும் நேரங்களிலும், குப்பைகள் அங்குமிங்குமாக சிதறி கிடக்கின்றன.
எனவே, பயன்பாடில்லாமல் இருக்கும் குப்பை தொட்டியை, சீர்படுத்தியோ அல்லது புதிய குப்பை தொட்டி வைக்கவோ ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

