/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கோரிக்கை
/
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கோரிக்கை
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கோரிக்கை
செங்கல்பட்டு புறவழிச்சாலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட கோரிக்கை
ADDED : ஆக 17, 2025 01:01 AM
மறைமலை:செங்கல்பட்டு புறவழிச்சாலை மேம்பாலத்தின் புற காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு புறவழிச்சாலை -காஞ்சிபுரம் சாலை மேம்பாலம் அருகில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்கின்றன.
செங்கல்பட்டு நகர பகுதிகளுக்குள் தொழிற்சாலை பணியாளர்கள் செல்லும் பேருந்துகளுக்கு அனுமதி இல்லாததால் மகேந்திரா சிட்டி, மறைமலை நகர், ஒரகடம் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள், இந்த பகுதியில் காத்திருந்து காலை, மதியம், இரவு நேரங்களில் பேருந்துகளில் சென்று வருகிறனர்.
இதனால் இந்த பகுதி எப்போதும் அதிக வாகன போக்குவரத்து நிறைந்து, பரபரப்பாக காணப்படுகிறது.
மேம்பாலத்தின் கீழே, செங்கல்பட்டு நகர போலீசார் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன் புறநகர் காவல் நிலையம் அமைக்கப்பட்டு, போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
தற்போது புறக்காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுவது இல்லை என வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த பகுதியை தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனம் மற்றும் பாதசாரிகள் கடந்து செல்கின்றனர். அதிக அளவில் பெண்கள் பேருத்துககாக காத்திருக்கும் போது, பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
வாகனங்கள் சாலையை கடக்கும் போது, அடிக்கடி சிறு விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மேலும், இங்கு உள்ள ஐந்து உயர்கோபுர மின் விளக்குகளில் மூன்று, பல மாதங்களாக எரியாததால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் திருட்டு பயம் உள்ளது.
முதல்வர், அமைச்சர் உள்ளிட்டோர் செல்லும் நேரங்களில் மட்டும், போலீசார் இந்த பகுதியில் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சில நேரங்களில் ஊர்காவல் படையை சேர்ந்த ஒருவர் பணியில் உள்ளார். இரவு நேரங்களில் பெரும்பாலும் புறநகர் காவல் நிலைய அறை பூட்டப்பட்டு உள்ளது.
எனவே, அந்த பகுதியில் பழுதடைந்து உள்ள மின் விளக்குகளை பழுது நீக்க வேண்டும். புற காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.