ADDED : செப் 15, 2026 04:33 AM

அ நிறம் | அளவு
சித்தாமூர்: சித்தாமூர் அடுத்த காட்டுதேவாத்துார் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் உள்ள
அம்பேத்கர் நகரில் உள்ள மின்மாற்றி மூலம் இப்பகுதியில் மின் வினியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்மாற்றி கம்பம்
சேதமடைந்து, கீழே சரிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, சேதமடைந்த மின்மாற்றி கம்பத்தை, மாற்றி அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
