/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை
/
கோவில் கட்டுமான பணிகள் விரைந்து முடிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 27, 2025 01:08 AM

மதுராந்தகம்::வரதராஜ பெருமாள் கோவில் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுராந்தகம் அடுத்த எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட அரசர் கோவில் பகுதியில், பழமையான வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலில் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார் சன்னிதிகளும், ஆஞ்சநேயர், ஆண்டாள், கருடாழ்வார் உப சன்னிதிகளும் உள்ளன.
தற்போது, ஹிந்து சமய அறநிலையத் துறையால் பூஜைகள் செய்து, கோவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2017ல், கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலில், புதிதாக ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்க உபயதாரர் நிதியின் வாயிலாக, 2.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள், கடந்தாண்டு துவக்கப்பட்டன.
ஒன்பது மாதங்களில் முடிக்கும் வகையில் பணிகள் துவக்கப்பட்ட நிலையில், தற்போது ஏழு மாதங்கள் ஆகியும், 40 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.
கோவில் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருவதால், விரைந்து பணிகளை மேற்கொள்ள, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.