/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டுகோள்
/
குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்த வேண்டுகோள்
ADDED : மார் 29, 2025 06:52 PM
அச்சிறுபாக்கம்:சித்தாமூர் ஒன்றியம், இரும்புலி ஊராட்சி காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாதன். திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவர், திடீர் நகர் அருகிலுள்ள இடத்தில் கூரை வீடு கட்டி தங்கி, கால்நடைகளை பராமரித்து வருகிறார்.
கடந்த 2019-ல், ஊராட்சி செயலர் வாயிலாக இவரது வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டு, பயன்படுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில், முன்னறிவிப்பின்றி கடந்த இரு மாதங்களுக்கு முன், ஊராட்சி நிர்வாகம் குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துள்ளது.
இதுகுறித்து கோபிநாதன் ஊராட்சி தலைவரிடம் கேட்ட போது தகுந்த பதில் இல்லாததால், சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து, குடிநீர் குழாய் இணைப்பு வழங்க கோரி, மனு அளித்துள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர், ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், இதுவரை குடிநீர் குழாய் இணைப்பு வழங்கவில்லை என, கோபிநாதன் குடும்பத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,'கோபிநாதன் வீட்டிற்கு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு குறித்து ஆராய்ந்து, உரிய அனுமதி இருப்பின், சான்றுகளின் அடிப்படையில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும்' என்றனர்.