/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கைலாசநாதர் கோவிலுக்கு பாதுகாவலர் நியமிக்க கோரிக்கை
/
கைலாசநாதர் கோவிலுக்கு பாதுகாவலர் நியமிக்க கோரிக்கை
கைலாசநாதர் கோவிலுக்கு பாதுகாவலர் நியமிக்க கோரிக்கை
கைலாசநாதர் கோவிலுக்கு பாதுகாவலர் நியமிக்க கோரிக்கை
ADDED : ஆக 25, 2025 11:03 PM
திருப்போரூர், திருப்போரூர் பிரணவமலை கைலாசநாதர் கோவிலுக்கு, பாதுகாவலர் நியமிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்போரூர், பிரணவ மலையில் கைலாசநாதர் -- பாலாம்பிகை அம்மன் கோவில் உள்ளது.
சங்க கால பழமையான கோவிலாக கூறப்படும் இக்கோவில், திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் துணை கோவிலாக உள்ளது.
கடந்த, 2010ல், இவ்வூரைச் சேர்ந்த உபயதாரர் மூலமாக கோவில் சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இக்கோவிலுக்கு, பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும், சமூக விரோத செயலை தடுக்கும் வகையிலும், மலைக்கோவில் நுழைவாயில் பகுதியில் பாதுகாவலரை நியமிக்க வேண்டுமென, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.