/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புது துணை மின் நிலையத்திற்கு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை
/
புது துணை மின் நிலையத்திற்கு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை
புது துணை மின் நிலையத்திற்கு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை
புது துணை மின் நிலையத்திற்கு ஊழியர்களை நியமிக்க கோரிக்கை
ADDED : மே 07, 2025 02:00 AM

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கண்ணகப்பட்டு பகுதியில் அமைக்கப்பட்ட புதிய துணை மின் நிலையத்தை பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப்படாததால், மின்வாரிய ஊழியர்கள் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் நிலவும் மின் அழுத்த பிரச்னைகள், மின்சாரம் வீணாவதை தடுக்க, புதிய துணை மின் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, திருப்போரூர் அருகே கண்ணகப்பட்டு பகுதியில், 110 'கே.வி.,' திறனுள்ள துணை மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, புதிய துணை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் முடிந்து, 2019ல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட இந்த துணை மின்நிலையத்தை பராமரிக்க, ஒரு உதவிப் பொறியாளர் உட்பட, அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், இத்துணை மின்நிலையத்தில் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை.
அங்குள்ள பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள திருப்போரூர், ஆலத்துார், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட துணை மின் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.
இவ்வாறு மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து ஓரிரு ஊழியர்கள், சுழற்சி முறையில் துணை மின் நிலைய பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஏற்கனவே, மேற்கண்ட மின் நிலைய பகுதியில் ஆள் பற்றாக்குறையால், மின்வாரியத்தில் உள்ள வழக்கமான பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கிறது.
இந்நிலையில், புதிய துணை மின் நிலைய பணிகளுக்கும் அவர்களையே அனுப்புவது கடும் அதிருப்தியையும், பணிச்சுமையையும் ஏற்படுத்தி வருகிறது; பணிகளும் பாதிக்கப்படுகின்றன.
எனவே, கண்ணகப்பட்டு புதிய துணை மின் நிலையத்திற்கு நிரந்தர பணியாளர்களை நியமிக்க, மின்வாரிய தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.