/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாத்திரை வழங்க போதிய பணியாளரை நியமிக்க கோரிக்கை
/
மாத்திரை வழங்க போதிய பணியாளரை நியமிக்க கோரிக்கை
ADDED : அக் 22, 2025 10:52 PM

செய்யூர், செய்யூர் அரசு மருத்துவமனையில், மாத்திரை வழங்கும் இடத்தில் போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டுமென, நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் பஜார் வீதியில், அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. நல்லுார், புத்துார், ஓணம்பாக்கம், தண்ணீர்பந்தல், சித்தாற்காடு, தேவராஜபுரம், அம்மனுார் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்த மருத்துவமனையால் பயனடைந்து வருகின்றனர்.
தினமும், நுாற்றுக்கணக்கானோர் இந்த மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில், மாத்திரை வழங்கும் இடத்தில், மருந்து வழங்குபவர் மற்றும் உதவியாளர் என, இருவர் மட்டுமே பணியில் உள்ளனர்.
காலை 8:00 முதல் 11:00 மணி வரை, 200க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் மருத்துவம் பார்க்க வந்து செல்கின்றனர். மாத் திரை வழங்கும் இடத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது .
இதுகுறித்து நோயாளிகள் கூறியதாவது:
தினமும் அதிகமானோர் வந்து செல்லும் இந்த மருத்துவமனையில், மாத்திரை வழங்கும் இடத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
பெரும்பாலான நேரத்தில் பயிற்சி செவிலியர்கள் மாத்திரை வழங்குவதால், ஒரு நபருக்கு வழங்க 5 முதல் 10 நிமிடங்கள் காத்திருக்க வேண்டி உள்ளது.
எனவே, மருத்துவத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாத்திரை வழங்கும் இடத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

