ADDED : ஏப் 02, 2026 05:17 AM

அ நிறம் | அளவு
முள்ளிக்கொளத்துார் எடையூர் காலனி 5வது வார்டில் உள்ள மாவலிங்கம்மன் கோவில் தெருவில் 50 வீடுகள் உள்ளன. அங்கு, கடந்த ஓரண்டாக குப்பை தொட்டி உடைந்து பழுதாகி உள்ளது.
குப்பைகள் வாங்குவதற்கு காலை நேரங்களில், துப்புரவுப் பணியாளர்கள் வந்தாலும், இடைப்பட்ட நேரங்களில் வீடுகளில் நிறையும் குப்பைகளை அப்பகுதி மக்கள் கீழே கொட்டுகின்றனர்.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, உடைந்த குப்பை தொட்டியை அகற்றி, புதிய குப்பை தொட்டி அமைக்க கவுன்சிலர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
---ரத்தினம், திருக்கழுக்குன்றம்.
