/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
/
செங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
செங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
செங்கை அரசு மருத்துவக்கல்லுாரிக்கு சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை
ADDED : செப் 07, 2025 10:33 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி வளாகத்தில் சுற்றுசுவர் அமைக்க வேண்டும் என, மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 1965ம் ஆண்டு துவக்கப்பட்டது. இம்மருத்துவமனைக்கு சொந்தமாக 480 ஏக்கர் நிலம் உள்ளது. இதில், அரசு மருத்துவக்கல்லுாரி மாணவர்கள் தங்கும் விடுதியில், 750 மாணவர்கள் தங்கி வருகின்றனர்.
செவிலியர் கல்லுாரி மாணவர்கள், 300க்கும் மேற்பட்டவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன், கல்லுாரி மற்றும் மருத்துவமனைக்கு சுற்றுசுவர் அமைத்தனர்.
இதில், மருத்துவக்கல்லுாரி சுற்றியுள்ள சுற்று சுவரை, ஆங்காங்கே, சமூக விரோத கும்பல் உடைத்து, மது அருந்தும் இடமாக பயன்படுத்தி வருகின்றனர். குடிமகன்கள் போதை தலைக்கு ஏறியதும், பாட்டில்களை போட்டு உடைத்து விடுகின்றனர்.
இப்பகுதி, சமூக விரோத கும்பல்களின் புகலிடமாக மாறி வருகிறது. இதனால், மாணவ - மாணவியருக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இதனால், மாணவர்கள் விளையாட பாதுகாப்பு இல்லாததால், ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லுாரி மற்றும் தனியார் விளையாட்டு மைதானங்களில், விளையாடி வருகின்றனர். இதை தவிர்க்க, மருத்துவக்கல்லுாரியை சுற்றி, சுற்றுச்சுவர் அமைக்க, மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ-- மாணவியர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.