/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை
/
மழைநீர் கால்வாய்களை துார்வார கோரிக்கை
ADDED : ஆக 18, 2025 02:10 AM
செங்கல்பட்டு;செங்கல்பட்டு நகராட்சி பகுதியில், வடகிழக்கு பருவ மழைக்கு முன், மழைநீர் கால்வாய்களை துார்வாரி சீரமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு நகராட்சியில், ஜே.சி.கே.நகர், நத்தம், வேதாசலம் நகர், அனுமந்தபுத்தேரி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில், கன மழை பெய்தால் நகரவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
நெடுஞ்சாலையில் சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய்கள் துார்ந்து உள்ளதால், மழை நேரத்தில் சாலையில் தண்ணீர் தேங்கும். வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வடகிழக்கு பருவ மழைக்கு முன், செங்கல்பட்டு நகரில் உள்ள மழைநீர் கால்வாய்கள், துார்வாரி சீரமைக்க வேண்டும். இப்பணிகளை, வரும் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமென, கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார்.
இந்த உத்தரவை, அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.