/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் பணிகளை முடிக்க வேண்டுகோள்
/
கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் பணிகளை முடிக்க வேண்டுகோள்
கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் பணிகளை முடிக்க வேண்டுகோள்
கூடுவாஞ்சேரி அறிவுசார் மையம் பணிகளை முடிக்க வேண்டுகோள்
ADDED : அக் 30, 2025 10:02 PM
கூடுவாஞ்சேரி:  செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சி, 8.5 ச.கி.மீ., பரப்பில் உள்ளது. இங்கு, 30 வார்டுகளில், லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தவிர, சுற்றுப் பகுதியில், காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகள், 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இங்கு, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற உதவும் வகையில் தேவையானபுத்தகங்கள், அறிவியல், கணிதம், பொருளாதாரம், நிதி மேலாண்மை 'ஸ்மார்ட் கிளாஸ்' மற்றும் வாசிப்பு அரங்க வசதிகளை உள்ளடக்கிய,'அறிவுசார் மையம்' அமைக்க கோரிக்கை எழுந்தது.
அதன்படி, நெல்லிக்குப்பம் சாலையில் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே, 1.82 கோடி ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைக்க, கடந்த ஆண்டு கட்டுமான பணிகள் துவங்கின. ஆனால், தற்போது வரை பணிகள் நீடித்து வருகின்றன.
அனைத்து கட்டுமான பணிகளையும் விரைந்து முடித்து, மாணவர்கள் மற்றும் மக்கள் பயன்பெறும் வகையில், அறிவுசார் மையத்தை விரைந்து திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

