/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
/
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்ட வேண்டுகோள்
ADDED : டிச 15, 2025 05:50 AM

மதுராந்தகம்: வெள்ளப்புத்துார் ஊராட்சியில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வேடந்தாங்கல் அருகே வெள்ளப்புத்துார் ஊராட்சியில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய கட்டடத்தில், கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வந்தது.
முறையான பராமரிப்பு இல்லாமல், கட்டடம் சேதமடைந்ததால், கடந்த சில மாதங்களுக்கு முன், இடிக்கப்பட்டது.
இதனால், ஊராட்சி மன்ற அலுவலகம், அருகே உள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டடத்தில் செயல்படுகிறது.
ஆனால் இங்கு, கிராம நிர்வாக பதிவேடுகள், ஆவணங்கள் ஆகியவற்றை பாதுகாப்பதில் பெரும் சிரமமாக உள்ளது.
எனவே, பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்ட அதே இடத்தில், கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.