தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கொளத்துார் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

கொளத்துார் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

கொளத்துார் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


UPDATED : ஜூலை 21, 2026 03:59 PM

ADDED : ஜூலை 21, 2026 03:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 21, 2026 03:59 PM ADDED : ஜூலை 21, 2026 03:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செய்யூர்:கொளத்துார் மாலச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பவுஞ்சூர் அருகே கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொளத்துார் மாலச்சேரி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.

வயல்வெளி பகுதியில் அமைந்துள்ள இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. மேலும், பகல் நேரங்களில், மேய்ச்சலுக்கு விடப்படும் கால்நடைகள் பள்ளி வளாகத்திற்குள் சுற்றி திரிவதால், பள்ளி குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரவு நேரங்களில் மர்ம நபர்கள் சிலர், பள்ளி வளாகத்திற்குள் மது அருந்தி விட்டு, மது பாட்டில்களை வீசி செல்கின்றனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பு கருதி இப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us