/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முதலியார்குப்பம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
/
முதலியார்குப்பம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
முதலியார்குப்பம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
முதலியார்குப்பம் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுகோள்
ADDED : செப் 28, 2025 11:50 PM
செய்யூர்:முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள மயானத்திற்கு, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தின் மயானம், நயினார்குப்பம் கிராமத்திற்குச் செல்லும் சாலையில் உள்ள பழைய கால்நடை மருத்துவமனைக்கு எதிரே உள்ளது.
மயானத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால், சாலையில் தினமும் நடந்து செல்லும் பள்ளி மாணவர்கள், இரவு நேரத்தில் செல்லும் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மேலும், பராமரிப்பின்றி மயானத்தில் மரம், செடிகள் வளர்ந்துள்ளதால், உடலை அடக்கம் செய்யும் போது சிரமப்பட வேண்டியுள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, மயானத்தை சீரமைத்து சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.