முதலியார்குப்பம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டுகோள்
முதலியார்குப்பம் அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் ஏற்படுத்த வேண்டுகோள்
ADDED : மார் 09, 2026 05:51 AM
செய்யூர்: முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளிக்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட முதலியார்குப்பம் கிராமத்தில், அரசு உயர்நிலைப் பள்ளி இயங்குகிறது. இதில், 6 முதல் 10ம் வகுப்பு வரை, 150க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.
பள்ளி வளாகத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு 10 குழந்தைகள் உள்ளனர். அங்கன்வாடி மைய கட்டடம் உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல், திறந்த நிலையில் உள்ளதால், கால்நடைகள் பள்ளி வளாகத்தில் உலா வருகின்றன.
துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, முதலியார்குப்பம் பள்ளி வளாகத்திற்கு சுற்றுச்சுவர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
