தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை

ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை


ADDED : ஆக 27, 2025 10:35 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2025 10:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்போரூர்:ஆலத்துார் சிட்கோ வளாகத்திற்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டுமென, தொழிலாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், 200 ஏக்கரில், சிட்கோ தொழிற்பேட்டை 1982ல் ஏற்படுத்தப்பட்டது. பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டதால், குறுகிய காலத்திலேயே, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு வந்தன.

தற்போது, இத்தொழிற்பேட்டையில், 32 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஆண்கள், பெண்கள் என, 20,000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். இந்த வளாகத்தில் முழுமையான சுற்றுச்சுவர் அமைக்கவில்லை. நுழைவாயில் பகுதி உட்பட, ஆங்காங்கே திறந்தவெளி பகுதிகளாக உள்ளன. சில பகுதியில் மின் விளக்கு இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இரவில் தொழிலாளர்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

தொழிலாளர்களின் பாதுகாப்பை கருதி, வளாகம் முழுதும் சுற்றுச்சுவர் அமைத்து, பாதுகாவலர் நியமிக்க அரசு முன்வர வேண்டும் என, தொழிலாளர்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us