sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

 ஆப்பூர் கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

/

 ஆப்பூர் கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

 ஆப்பூர் கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை

 ஆப்பூர் கல் குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க கோரிக்கை


ADDED : ஜன 17, 2026 05:48 AM

Google News

ADDED : ஜன 17, 2026 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறைமலை நகர்: ஆப் பூர் கல்குவாரி பள்ளத்தை சுற்றி தடுப்பு வேலி அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில் வனப்பகுதிக்கு உட்பட்ட பகுதியில் பயன்பாட்டில் இல்லாத கல் குவாரி பள்ளம் உள்ளது. இது 500 அடி வரை ஆழம் உடையது.

இதில் தண்ணீர் நிரம்பி வழிவதால் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்க பெருமாள் கோவில், ஒரகடம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்கள் இங்கு குளிக்க வார இறுதி நாட்களில் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் இளைஞர்கள் மது போதையில் கல்குவாரி பள்ளத்தில் குளித்து வருகின்றனர். கல் குவாரி பள்ளம் குறித்து விழிப்புணர்வு இல்லாத பெற்றோர்களும் குழந்தைகளுடன் வந்து துணி துவைப்பது, நீச்சல் பழகுதல் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இ தன் காரணமாக உயிரிழப்புகள் ஏற் படுகின்றன.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறிய தாவது:

இந்த கல் குவாரி பள்ளம் அருகில் குடியிருப்புகள் ஏதும் இல்லாததால் ஆபத்து காலங்களில் காப்பாற்ற கூட ஆட்கள் யாரும் இரு க்க மா ட்டார்கள்.

இதில் குளிக்க வேண்டாம் என, எச்சரிக்கை செய்யும் போது யாரும் கண்டுகொள்வதில்லை.

கடந்தாண்டு மது போதையில் வாலிபர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

எனவே இந்த கல் குவாரி பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்பு வேலி அமைக்கவும், எச்சரிக்கை பலகை வைத்து யாரும் அருகில் செல்ல முடியாதபடி தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us