/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
/
மழைநீர் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 21, 2024 10:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் முறையான வடிகால்வாய் வசதி இல்லை. இதனால், மழைக்காலத்தில் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது.
மழை விட்டும், சில நாட்கள் அப்பகுதியில் மழைநீர் தேங்குவதால், பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட கிராமத்தில் முறையான வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.