/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
/
மாம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
மாம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
மாம்பாக்கம் நெடுஞ்சாலையோரம் வடிகால்வாய் அமைக்க கோரிக்கை
ADDED : அக் 01, 2024 12:26 AM

திருப்போரூர், - திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம்- - வண்டலுார் இடையே உள்ள மாம்பாக்கம் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 4,000த்திற்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் படிக்கின்றனர். தவிர, தொழில் நிறுவனங்கள், வணிக கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளன.
மாம்பாக்கம் வழியாக திருப்போரூர்- - தாம்பரம், கொளத்துார்- - மேடவாக்கம், புங்கேரி - தாம்பரம், கோவளம்- - தாம்பரம், மாமல்லபுரம்- - தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு தடம் சார்ந்த, 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் செல்கின்றன.
பேருந்து நிறுத்தம் அருகே, சாலையோரத்தில் வடிகால்வாய் வசதி இல்லாததால், மழை நேரத்தில் தண்ணீர் தேங்குகிறது. இதனால், சாலையில் நடந்து செல்வோருக்கும், வாகன ஓட்டிகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் இடையூறாக உள்ளது.
இது தொடர்பாக, மக்கள் சம்பந்தப்பட்ட துறையிலும், குறைதீர் கூட்டத்திலும் தொடர்ச்சியாக கோரிக்கை மனு அளித்தும், கால்வாய் அமைக்க, எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, மாம்பாக்கம் சாலையோரங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க, வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்திஉள்ளனர்.