ADDED : ஜூன் 07, 2026 02:50 AM

அ நிறம் | அளவு
திருக்கழுக்குன்றம்: நெரும்பூர் ஊராட்சியில் சேதமடைந்துள்ள தார்சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கழுக்குன்றத்தில் நெரும்பூர் ஊராட்சி உள்ளது. அங்கு, அண்ணாநகர், அண்ணாமலை குப்பம், வேட்டைக்கார நத்தம், நெரும்பூர் ஆகிய பகுதிகளில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
அதே பகுதியில் உள்ள தலையாரி தெரு, கேசவநாயுடு தெருவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சாலை முழுதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
எனவே, இந்த இரண்டு தெருக்களிலும் தார்ச்சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
