ADDED : ஏப் 24, 2026 05:02 PM

கூவத்துார்:வேப்பஞ்சேரி கிராமத்தில் பழதடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூவத்துார் அருகே கடலுார் ஊராட்சிக்குட்பட்டது வேப்பஞ்சேரி கிராமம். இங்கு கங்கையம்மன் கோவிலை சுற்றி, அம்பேத்கர் பிரதான தெரு மற்றும் மூன்று குறுக்குத் தெருக்கள் உள்ளன. 150க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
அங்குள்ள நான்கு தெருக்களிலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் சாலை அமைக்கப்படவில்லை.
இதனால் இந்த சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மழைகாலத்தில் சாலை முழுதும் சகதியாக மாறிவிடுகிறது. இச்சாலையை சீரமைக்க கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
