/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் இடையூறான மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை
/
சாலையில் இடையூறான மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை
சாலையில் இடையூறான மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை
சாலையில் இடையூறான மரக்கிளை வெட்டி அப்புறப்படுத்த கோரிக்கை
ADDED : மே 18, 2025 01:55 AM

மதுராந்தகம்,:சென்னை - - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து மதுராந்தகம் டவுன் பகுதிக்கு செல்லும் புறவழிச் சாலை உள்ளது.
இந்த ஜி.எஸ்.டி., சாலை வழியாக மதுராந்தகம் நகர் பகுதி மற்றும் சூனாம்பேடு, சித்தாமூர், செய்யூர், பவுஞ்சூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் மிக முக்கியமான சாலை ஆகும்.
இந்த சாலையில், மதுராந்தகம் எஸ்.பி.ஐ., வங்கி எதிரே உள்ள, காட்டுவா மரத்தின் கிளைகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து உள்ளது. அதனால், இப்பகுதியில் கனரக வாகனங்கள் கடந்து செல்ல மிகவும் சிரமமாக உள்ளது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறையினர், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மரத்தின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.