/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அபாய் நிலையில் அரசு பள்ளி கட்டடம் இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
/
அபாய் நிலையில் அரசு பள்ளி கட்டடம் இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
அபாய் நிலையில் அரசு பள்ளி கட்டடம் இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
அபாய் நிலையில் அரசு பள்ளி கட்டடம் இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
ADDED : மார் 29, 2025 01:31 AM

சிங்கபெருமாள்கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வெங்கடாபுரம் ஊராட்சி, தெள்ளிமேடு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது.
இதில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளி கட்டடம் கட்டப்பட்டு 25 ஆண்டுகளை கடந்ததால், கட்டடம் பலமிழந்து, பல இடங்களில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, மாணவ -- மாணவியருக்கு இதே வளாகத்தில் உள்ள அரசு இ - சேவை மையத்தில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அங்கு போதிய இடவசதி இல்லாததால், அவர்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, அரசு பள்ளிக்கு புது கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
வகுப்பறை கட்டடம் சேதமடைந்தது உள்ளதால், இரண்டு ஆண்டுகளாக இ - சேவை மையத்தில் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கிராமத்தில் உள்ள பலர் தங்களின் குழந்தைகளை, வேறு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
கிராமத்தில் பள்ளி இருந்தும், வேறு கிராமங்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்கும் சூழல் ஏற்பட்டு உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் இந்த பழைய கட்டடத்தை இடித்து விட்டு, துவக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.