/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த சமுதாய நலக்கூடம் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
/
பழுதடைந்த சமுதாய நலக்கூடம் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
பழுதடைந்த சமுதாய நலக்கூடம் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
பழுதடைந்த சமுதாய நலக்கூடம் இடித்து புதிதாக கட்ட கோரிக்கை
ADDED : செப் 02, 2025 12:54 AM
சித்தாமூர்,பொலம்பாக்கம் ஊராட்சியில் பழுதடைந்துள்ள சமுதாய நலக்கூடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே உள்ள பொலம்பாக்கம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இங்கு, 50 ஆண்டுகளுக்கு முன், 2 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டு, சமுதாய நலக்கூடம் அமைக்கப்பட்டது.
சரவம்பாக்கம், பொலம்பாக்கம், பேரம்பாக்கம், அனந்தமங்கலம், கன்னிமங்கலம், பழவூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் ஏழை மக்கள், தங்களது குடும்பங்களின் சுப நிகழ்ச்சிகளை, இந்த சமுதாய நலக்கூடத்தில், குறைந்த வாடகையில் நடத்தி வந்தனர்.
முறையான பராமரிப்பின்றி, நாளடைவில் சமுதாய நலக்கூட கட்டடம் பழுதடைந்தது. கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியும் இல்லாததால், இந்த சமுதாய நலக்கூடத்தில் நிகழ்ச்சிகள் நடத்துவதை பொதுமக்கள் தவிர்த்து விட்டனர்.
இதனால் சித்தாமூர், சோத்துப்பாக்கம், அச்சிறுபாக்கம், மதுராந்தகம் போன்ற பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில், அதிக செலவு செய்து சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் செலவு மற்றும் அலைச்சல் ஏற்படுவதால், ஏழை மக்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, பொலம்பாக்கத்தில் உள்ள பழைய சமுதாய நலக்கூட கட்டடத்தை இடித்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் புதிதாக கட்ட வேண்டுமென, கிராமத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.