/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழைய அங்கன்வாடியை இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
/
பழைய அங்கன்வாடியை இடித்து புதிதாக கட்ட வேண்டுகோள்
ADDED : அக் 23, 2025 09:06 PM
சித்தாமூர்:அரசூரில், பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக கட்ட வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அடுத்த வன்னியநல்லுார் ஊராட்சியில், 900க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வன்னியநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்ட அரசூர் கிராமத்தில், தற்காலிக கட்டடத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில், 15 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர்.
மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 20க்கும் மேற்பட்டோர், இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.
அரசூரில் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டடம் பழுதடைந்ததால், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சமுதாய நலக்கூடம் அருகே உள்ள, தற்காலிக கட்டடத்திற்கு மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
இங்கு போதிய இடவசதி இல்லாமல், குழந்தைகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, பழைய அங்கன்வாடி கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிதாக அங்கன்வாடி கட்டடம் கட்ட வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

