/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கோவில் குளத்தை தூர்வார கோரிக்கை
/
கோவில் குளத்தை தூர்வார கோரிக்கை
ADDED : பிப் 01, 2025 12:09 AM

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் பழமையான பாலாம்பிகை சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவில் எதிரே உள்ள கோவில் குளம் உள்ளது.
இது சுற்றியுள்ள கிராமத்தின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ளது. குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கரைகள் பலவீனமானவும், முறையான மழை நீர் வரத்து கால்வாய் இல்லாமல் உள்ளது.
இதன் காரணமாக குளத்தில் போதுமான அளவு தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் கோடை காலம் துவங்கும் முன்னரே ஒவ்வொரு ஆண்டும் குளம் வறண்டு விடுவதால் கால்நடைகள் தண்ணீருக்கு நீண்ட தூரம் செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
எனவே இந்த குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.