ADDED : ஏப் 14, 2026 06:44 PM

பவுஞ்சூர்:கொடூர் ஊராட்சியில் சேதமடைந்த மின்கம்பத்தை நீக்கி, புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பவுஞ்சூர் அருகே கொடூர் ஊராட்சிக்குட்பட்ட கொளத்துார் பகுதியில் 7 க்கும் மேற்பட்டதெருக்கள் உள்ளன. அங்கு 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அங்குள்ள மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மின்கம்பம் மேல்பாகம் சிமெண்ட் காரைகள் உதிர்ந்து சேதமடைந்துள்ளது. கம்பத்தின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மின்கம்பம் இருக்கும் பகுதியில், வீடு கட்டும் பணியும் நடக்கிறது. இதனால் விபத்து அச்சத்துடனே அப்பகுதி மக்கள் செல்கின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் பழைய மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
