/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பொத்தேரி ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
/
பொத்தேரி ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
பொத்தேரி ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
பொத்தேரி ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 01, 2025 12:20 AM

மறைமலைநகர், பொத்தேரி ஏரிக்கரை சாலையில், தடுப்புக் கம்பிகள் அமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி, பொத்தேரி ஏரிக்கரை சாலை வழியாக வல்லாஞ்சேரி, கிழக்கு பொத்தேரி ஆகிய கிராம மக்கள் மறைமலைநகர், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.
இச்சாலையின் குறுக்கே பொத்தேரி ஏரியின் உபரி நீர் வெளியேறும் கலங்கல் பகுதியை கடந்து செல்ல, தரைப்பாலம் ஒன்று உள்ளது. இந்த தரைப்பாலத்தின் இருபுறமும், தடுப்புச் சுவர் மற்றும் தடுப்புக் கம்பிகள் இல்லை.
இதன் காரணமாக, இரவு நேரங்களில் இந்த பகுதியைக் கடக்கும் வாகன ஓட்டிகள், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த ஏரிக்கரை சாலையில் பெரும்பாலும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களே அதிக அளவில் சென்று வருகின்றன.
எனவே, இந்த தரைப்பாலத்தின் இருபுறமும் இரும்பு தடுப்புகள் அமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.