/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுகோள்
/
சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுகோள்
ADDED : ஆக 10, 2025 09:25 PM
சித்தாமூர்:சரவம்பாக்கம் கிராமத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சித்தாமூர் அருகே சரவம்பாக்கம் கிராமத்தில், 3,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இதன் சுற்றுவட்டாரத்தில் சித்தாமூர், கன்னிமங்கலம், நல்லுாமூர், பெருவெளி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
மதுராந்தகம், மேல்மருவத்துார், செய்யூர், சூணாம்பேடு போன்ற பகுதிகளுக்கு மையப்பகுதியாக உள்ள இப்பகுதிக்கு, அனைத்து பகுதிகளிலும் இருந்து போக்குவரத்து வசதி உள்ளது.
அதிக மக்கள் தொகை கொண்ட இப்பகுதியில் சமுதாய நலக்கூடம் இல்லாததால், இப்பகுதியில் வசிப்போர் தங்களது குடும்ப சுப நிகழ்ச்சிகளை, தனியார் மண்டபங்களில் நடத்தி வருகின்றனர்.
தனியார் திருமண மண்டபங்களில் வாடகை, 50,000 ரூபாய் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சரவம்பாக்கம் பகுதியில் சமுதாய நலக்கூடம் அமைத்து, அதன் மூலமாக ஊராட்சி நிர்வாகத்திற்கும் வருவாய் ஈட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.