/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூரில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை
/
செய்யூரில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த கோரிக்கை
ADDED : அக் 05, 2025 01:52 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சியில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வடிகால்வாய் வசதி ஏற்படுத்த வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு செய்யூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்டகுடும்பத்தினர் வசித்துவருகின்றனர்.
ஊராட்சிக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் தெருவில் வடிகால்வாய் வசதி இல்லாததால் குழாய்களில் இருந்து வெளியேரும் உபரிநீர் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சாலையோரத்தில் கழிவுநீர் தேங்கி இருப்பதால் துர்நாற்றம் வீசி நோய் தொற்று பரவும் நிலை உள்ளது. கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி, இரவு நேரத்தில் கொசுக்கடியால் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் சாலையோரத்தில் கழிவுநீர் தேங்காமல் இருக்க ஈஸ்வரன் கோவில் தெருவில் வடிகால்வாய் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.