/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க கோரிக்கை
/
மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க கோரிக்கை
மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க கோரிக்கை
மானாமதி மாநகர பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க கோரிக்கை
ADDED : ஜன 04, 2025 09:22 PM
திருப்போரூர்:அடையாறு - மானாமதி இடையே தடம் எண் 522 என்ற மாநகர பேருந்து கடந்த 2009 முதல் இயக்கப்பட்டு வருகிறது.
திருப்போரூர் வழியாக இயக்கப்படும் இப்பேருந்தில் பல்வேறு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.
மானாமதியில் இருந்து எச்சூர் சந்திப்பு 4 கி.மீ., உள்ளது. எச்சூர் வரை இப்பேருந்தை நீட்டித்தால் சுற்றியுள்ள குழிப்பாந்தண்டலம், புலியூர், புலிக்குன்றம் உள்ளிட்ட கிராம விவசாயிகள் தங்களின் விளை பொருட்களை சென்னை வரை எடுத்துச் செல்ல முடியும்.
மேலும், மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள் கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு சென்றுவருவர்.
எனவே, மாநகரப் போக்குவரத்து கழக நிர்வாகம் அடையாறில் இருந்து திருப்போரூர் வழியாக மானாம்பதி வரை இயக்கும் தடம் எண் 522 என்ற பேருந்தை எச்சூர் வரை நீட்டிக்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.