/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருப்போரூரில் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டுகோள்
/
திருப்போரூரில் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டுகோள்
திருப்போரூரில் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டுகோள்
திருப்போரூரில் வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை நிரப்ப வேண்டுகோள்
ADDED : மே 13, 2025 08:50 PM
திருப்போரூர்:திருப்போரூர் தாலுகாவில் திருப்போரூர், பையனுார், மானாமதி, கரும்பாக்கம், நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம் ஆகிய ஆறு குறுவட்டங்களில், 80க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
தாலுகா வட்ட வழங்கல் பிரிவில், புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பிக்கும் மனு மீது விசாரணை, குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குதல் குறித்த விசாரணை, நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தல் போன்ற குடும்ப அட்டை சம்பந்தமான பணிகளை, வட்ட வழங்கல் அலுவலர் மேற்கொள்கிறார்.
ஆனால், தற்போது இப்பணியிடம் காலியாக உள்ளது. இதனால், மேற்கண்ட வழங்கல் துறை சார்ந்த பணிகள் பாதிக்கப்படுகின்றன. இதற்காக வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும், வட்ட வழங்கல் அலுவலருக்கு கீழ் பணிபுரியும் மற்ற ஊழியர்களுக்கு, பணிச்சுமையும் அதிகரிக்கிறது.
எனவே, திருப்போரூரில் காலியாக உள்ள வட்ட வழங்கல் அலுவலர் பணியிடத்தை, உடனடியாக நிரப்ப வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.