/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
இருளர்களுக்கு பட்டா வழங்கி புது வீடுகள் கட்ட கோரிக்கை
/
இருளர்களுக்கு பட்டா வழங்கி புது வீடுகள் கட்ட கோரிக்கை
இருளர்களுக்கு பட்டா வழங்கி புது வீடுகள் கட்ட கோரிக்கை
இருளர்களுக்கு பட்டா வழங்கி புது வீடுகள் கட்ட கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 02:03 AM

புதுப்பட்டினம்:வாயலுார் இருளர்களுக்கு, தனித்தனி வீட்டுமனைப் பட்டா வழங்கி, பாழடைந்த வீடுகளுக்கு மாற்றாக, புதிய வீடுகள் கட்டித் தர வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சி காரைத்திட்டு பகுதியில், இருளர் குடும்பத்தினர் வாழ்கின்றனர். சுற்றுப்புற பகுதிகளில் கூலி வேலை செய்கின்றனர்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், குடிசையில் வசித்தனர். அவர்கள் மேம்பாட்டிற்காக தண்டரை, இருளர் பழங்குடி பெண்கள் நல அமைப்பினர், கடந்த 2005ல், வாயலுார் இருளர் பெண்கள் சங்கம் ஏற்படுத்தினர்.
அதே பகுதியில், தனியாரின் இரண்டு ஏக்கர் பட்டா இடத்தை, தலா ஒரு ஏக்கர் வீதம் சங்கத்தின் பெயரில் கிரயத்திற்கு பெற்று, பதிந்தனர்.
அதே ஆண்டில், ஒரு ஏக்கர் இடத்தில், 36 குடும்பத்தினருக்கு, தனித்தனி வீடு கட்டி ஒப்படைக்கப்பட்டது.
இவ்வீடுகள் பராமரிப்பின்றி சீரழிந்துள்ளன.
ஏழைகளான அவர்களால், வீடுகளை புதுப்பிக்க இயலாமல், மேலும் மேலும் சீரழிந்து சிரமத்துடன் வசிக்கின்றனர்.
சங்கம் பெயரில் உள்ள இடம் என்பதால், அரசும் கண்டுகொள்ளவில்லை.
இது ஒருபுறமிருக்க, மேலும் உள்ள ஒரு ஏக்கர் இடத்தில், குடிசையில் வசித்த 17 குடும்பத்தினருக்கு, பழங்குடி நலத்துறையினர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், வீடுகள் கட்டி ஒப்படைத்தனர்.
அதே இடத்தில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினரும் புதிதாக உருவாகி, குடிசையில் வசிக்கின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முந்தைய வீடுகளுக்கு மாற்றாக புதிதாக கட்டவும், குடிசையில் வாழ்பவர்களுக்கு, அரசு நலத்திட்ட வீடுகள் கட்டவும், சங்கத்தின் பெயரில் உள்ள பட்டாவை, பயனாளி பெயருக்கு மாற்றப்பட வேண்டியது அவசியம்.
அதற்கு வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இருளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.