/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கொடூர் இருளர் குடியிருப்பில் வடிகால் அமைக்க கோரிக்கை
/
கொடூர் இருளர் குடியிருப்பில் வடிகால் அமைக்க கோரிக்கை
கொடூர் இருளர் குடியிருப்பில் வடிகால் அமைக்க கோரிக்கை
கொடூர் இருளர் குடியிருப்பில் வடிகால் அமைக்க கோரிக்கை
ADDED : டிச 14, 2024 11:49 PM

செய்யூர்:செய்யூர் அடுத்த கொடூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்சிவிளாகம் பகுதியில், சொந்த வீடு இல்லாத, 28 இருளர் குடும்பத்தினருக்கு, பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது.
கொடூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், இருளர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடந்து வரும் பகுதி வழியாக கடந்து செல்கிறது.
கட்டுமானப் பணிகள் முடிந்து, மக்களிடம் வீடுகளை ஒப்படைத்த பின், இதுபோன்று மழைக்காலத்தில் ஏரி உபரிநீரால், இவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இருளர் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.