/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
/
ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 29, 2025 12:43 AM

மறைமலை நகர்:ஒரக்காட்பேட்டை மேம்பாலத்தில் மின் விளக்கு அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பழத்தோட்டம் பகுதியில் பாலாற்று நடுவே திம்மாவரம் பழத்தோட்டம் -ஒரக்காட்பேட்டை செல்லும் மேம்பாலம் 2017ம் ஆண்டு அமைக்கப்பட்டது.
இந்த மேம்பாலத்தை ஒரக்காட்பேட்டை, மாம்பாக்கம், சாலவாக்கம்,காவாந் தண்டலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மேம்பாலம் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் பாலமாக உள்ளது. இந்த பாலம் வழியாக செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அடிப்படை தேவைகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளதால் இரவு நேரங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இந்த மேம்பாலம் வழியாக தனியார் தொழிற்சாலைக்கு ஆட்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள், மண் லாரிகள் மற்றும் விவசாய இடுபொருள் வாங்க செங்கல்பட்டு செல்வோரும். காய்கறிகள் பயிரிடும் விவசாயிகள் செங்கல்பட்டு மார்க்கெட்டிற்கு இருசக்கர வாகனங்களில் பொருள்களை எடுத்து சென்று வருகின்றனர்.
இந்த மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததாலும், சாலை வளைவில் வேகத்தடை இல்லாததாலும் விபத்து நடந்து வருகின்றன. சில மாதங்களில் பத்துக்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த பகுதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இருமாவட்ட எல்லைப்பகுதியில் உள்ளதால் இரண்டு மாவட்ட மக்களும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் பாலத்தின் ஆத்துார் பகுதி செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லையிலும், ஒரக்காட்பேட்டை பகுதி சாலவாக்கம் காவல் நிலையம் எல்லையிலும் உள்ளது. இதனால் விபத்து குறித்து விசாரணை நடத்துவதிலும் போலீசாருக்கு சிக்கல் ஏற்படுகிறது.
எனவே விபத்துக்களை தடுக்க மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.