/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூவத்துார் -- பவுஞ்சூர் சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
/
கூவத்துார் -- பவுஞ்சூர் சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
கூவத்துார் -- பவுஞ்சூர் சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
கூவத்துார் -- பவுஞ்சூர் சாலையில் மின் விளக்குகள் அமைக்க கோரிக்கை
ADDED : நவ 23, 2025 01:43 AM
பவுஞ்சூர்: கூவத்துார் -- பவுஞ்சூர் இடையே செல்லும் 12 கி.மீ., துாரம் உள்ள நெடுஞ்சாலை வழியாக நெடுமரம், நெற்குணப்பட்டு, தட்டாம்பட்டு, நெல்வாய்பாளையம் போன்ற 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் சென்று வருகின்றனர்.
மேலும், இந்த பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து, ஜல்லி, எம்-சான்ட் மணல் உள்ளிட்டவை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் அதிக அளவில் செல்கின்றன.
சாலையில் மின் விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும், அவ்வப்போது விபத்துகள் நடந்து வருவதால் அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.
எனவே, மின் விளக்குகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.