/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வில்லியம்பாக்கம் சாலையில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
/
வில்லியம்பாக்கம் சாலையில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
வில்லியம்பாக்கம் சாலையில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
வில்லியம்பாக்கம் சாலையில் மின் விளக்கு அமைக்க கோரிக்கை
ADDED : ஜூன் 15, 2025 01:46 AM

மறைமலை நகர்,:வில்லியம்பாக்கம் சாலையில் மின்விளக்கு அமைக்க, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லியம்பாக்கம் --- சாஸ்திரம்பாக்கம் சாலை 5 கி.மீ., துாரம் உள்ளது. இந்த சாலை செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையின் இணைப்பு சாலையாகும்.
இந்த சாலையை ஆத்துார், வடகால், கொளத்துார் உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் பேருந்து போக்குவரத்து இல்லாததால் இருசக்கர வாகன ஓட்டிகளே அதிக அளவில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் வில்லியம்பாக்கம் டாஸ்மாக் கடையின் இருபுறமும் 1 கி.மீ., துாரம் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
மது அருந்தி விட்டு வேகமாக செல்பவர்களால் சக வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.