/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அடிக்கடி பழுதாகும் மின்விளக்குகள் எல்.இ.டி., பல்பு அமைக்க கோரிக்கை
/
அடிக்கடி பழுதாகும் மின்விளக்குகள் எல்.இ.டி., பல்பு அமைக்க கோரிக்கை
அடிக்கடி பழுதாகும் மின்விளக்குகள் எல்.இ.டி., பல்பு அமைக்க கோரிக்கை
அடிக்கடி பழுதாகும் மின்விளக்குகள் எல்.இ.டி., பல்பு அமைக்க கோரிக்கை
ADDED : மார் 11, 2024 04:43 AM

செய்யூர், : செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் 23 கிராமங்கள் உள்ளன. இதில், 35,000த்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கிராமங்களில் உள்ள தெருக்கள், பொது இடங்கள், சாலை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பேரூராட்சி சார்பில், 35 உயர்கோபுர விளக்கு, 1,748 டியூப் லைட், 1,418 சி.எப்.எல்., 65 எல்.இ.டி., விளக்கு, 7 சோலார் மின்விளக்கு என, 3,273 தெருவிளக்குகள் அமைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
தற்போது அமைக்கப்பட்டு உள்ள டியூப் லைட் மற்றும் சி.எப்.எல்., விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து வருகிறது.
இடைக்கழிநாடு பேரூராட்சி கடலோரத்தில் அமைந்து உள்ளதால், மழைக்காலங்களில் வீசும் பலத்த காற்று காரணமாக, அடிக்கடி மின்விளக்குகள் சேதமடைகின்றன. இதனால், சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால், அதிகப்படியான பராமரிப்பு செலவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது பயன்படுத்தப்படும் மின்விளக்குகள் அதிகபடியான மின்சாரம் செலவழிக்கும் வகையில் உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தற்போதுள்ள மின்விளக்குகளை அகற்றி, இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு முழுதும், புதிய எல்.இ.டி., தெருவிளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

