/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வண்டலுார் ஓட்டேரி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
வண்டலுார் ஓட்டேரி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
வண்டலுார் ஓட்டேரி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
வண்டலுார் ஓட்டேரி பகுதியில் வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : மே 22, 2025 01:24 AM

வண்டலுார்:வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி பகுதிக்கு உட்பட்ட நான்கு தெருக்களின் சாலைகளில், வேகத்தடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், வண்டலுார் ஊராட்சியில், 50,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இதில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நான்கு தெருக்களில், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர், அதிவேகத்தில் செல்கின்றனர்.
இதனால், சாலையில் நடந்து செல்லும் குழந்தைகள், முதியோர், பெண்கள் மீது வாகனங்கள் மோதி, அவர்கள் காயமடைவது வாடிக்கையாக நடைபெற்று வருகிறது.
எனவே, இதில் குறிப்பிட்ட நான்கு தெருக்களின் சாலைகளிலும் வேகத்தடை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறியதாவது:
வண்டலுார் ஊராட்சி, ஓட்டேரி பகுதி, 11வது வார்டுக்கு உட்பட்ட செல்வ விநாயகர் கோவில் தெரு, பிரதான சாலை 400 மீ., துாரம் உள்ளது.
இந்த சாலையின் இருபுறமும் சிறிய மருத்துவமனைகள், மருந்தகங்கள் உட்பட, 100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
இந்த சாலையில் தினமும், இரு நபர்களாவது விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.
தவிர, 12 மற்றும் 13வது வார்டுக்கு உட்பட்ட வால்மீகி தெரு, 13வது வார்டுக்கு உட்பட்ட நான்காவது பிரதான சாலை, 14வது வார்டுக்கு உட்பட்ட முதல் பிரதான சாலையிலும், இதேபோன்று அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன.
எனவே, நான்கு சாலைகளிலும் 50 மீ., துாரத்திற்கு ஒரு வேகத்தடை அமைத்தால், விபத்துகளை தவிர்க்க முடியும்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.