/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பள்ளி அருகே அபாய சாலை வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை
/
பள்ளி அருகே அபாய சாலை வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை
பள்ளி அருகே அபாய சாலை வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை
பள்ளி அருகே அபாய சாலை வளைவு வேகத்தடை அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2025 12:19 AM

மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவிலில், பள்ளி அருகே உள்ள அபாய சாலை வளைவில் வேகத்தடை அமைக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.
சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் சாலை, 9 கி.மீ., துாரம் உடையது.
திருப்போரூர் -- செங்கல்பட்டு சாலையின் இணைப்பு சாலையான இச்சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
பல்வேறு பணிகளுக்காக சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பொதுமக்கள் மற்றும் வாகன சென்று வர, இது பிரதான சாலையாக உள்ளது.
இந்த சாலையில், சிங்கபெருமாள் கோவில் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி அருகே, வளைவு பகுதியில் வேகத்தடை இல்லாததால், அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் செல்கின்றன.
இதனால், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் இங்கு ஆய்வு செய்து, விபத்துகளை தடுக்க சாலை வளைவில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.