/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஜி.எஸ்.டி., சாலை போக்குவரத்து சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
/
ஜி.எஸ்.டி., சாலை போக்குவரத்து சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ஜி.எஸ்.டி., சாலை போக்குவரத்து சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ஜி.எஸ்.டி., சாலை போக்குவரத்து சந்திப்புகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க கோரிக்கை
ADDED : ஆக 15, 2025 11:16 PM

மறைமலை நகர்:புறநகர் பகுதிகளில், ஜி.எஸ்.டி., சாலையிலுள்ள போக்குவரத்து சந்திப்பு மற்றும் சிக்னல்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த சாலையில், இரும்புலியூர் -- வண்டலுார் வரை 2.3 கி.மீ.,யும், வண்டலுார் -- கூடுவாஞ்சேரி வரை 5.3 கி.மீ.,யும், கூடுவாஞ்சேரி -- செட்டி புண்ணியம் வரை 13 கி.மீ.,யும், சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.
சாலை விரிவாக்க பணிகளுக்காக, போக்குவரத்து சந்திப்புகளில் இருந்த போக்குவரத்து சிக்னல் கம்பங்கள், கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்டவை அப்புறப்படுத்தப்பட்டன.
தற்போது, பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் போக்குவரத்து சிக்னல்கள் அமைக்கப்பட்ட நிலையில், காவல் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை.
குறிப்பாக, பொத்தேரி அடுத்த தைலாவரம் போக்குவரத்து சந்திப்பு முதல் செட்டி புண்ணியம் வரை, 11 போக்குவரத்து சிக்னல்கள் உள்ளன.
இந்த இடங்களில் ஒரு இடத்தில் கூட, கண்காணிப்பு கேமரா இல்லை.
இதனால், விபத்து ஏற்படும் போது, விபத்து ஏற்படுத்தும் வாகனங்களை கண்டுபிடிப்பது, யார் மீது தவறு என தெரிந்து கொள்வதில், போக்குவரத்து போலீசாருக்கு குழப்பம் ஏற்படுகிறது.
இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஜி.எஸ்.டி., சாலையில் விபத்து நடைபெறாத நாட்களே இல்லை. விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் பணியில் ஈடுபட வேண்டும்.
சமீப காலமாக பொத்தேரி, சிங்கபெருமாள் கோவில், தைலாவரம், மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள சிக்னல்கள், சில நேரங்களில் செயல்படுவது இல்லை. அனைத்து சிக்னல்களையும் தானியங்கி முறையில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து சிக்னல்கள் செயல்படாத நேரங்களில், போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.