/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நிழற்குடையுடன் கூடிய கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
நிழற்குடையுடன் கூடிய கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
நிழற்குடையுடன் கூடிய கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
நிழற்குடையுடன் கூடிய கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : அக் 13, 2025 12:46 AM

மதுராந்தகம்:ராமாபுரம் பகுதியில், வந்தவாசி -- செய்யூர் மாநில நெடுஞ்சாலையில், நிழற்குடையுடன் கூடிய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை - -கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட செய்யூர் -- வந்தவாசி -- போளூர் சாலை மேம்பாட்டு பணிகள் முடிவடைந்து, வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலையில், வாகன ஓட்டிகள் மற்றும் பயணியர் பயன்பெறும் வகையில் பயணியர் நிழற்குடை மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டது.
இதில், கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல், பூட்டியே உள்ளது.
மேலும், இங்கு அமைக்கப்பட்டுள்ள சிறிய குடிநீர் தொட்டியும், பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகிறது.
எனவே, மாநில நெடுஞ்சாலைத் துறையினர், இந்த கழிப்பறையை பயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சிறிய குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றி, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.