/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பிக்கப்பட்ட மகளிர் கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
/
புதுப்பிக்கப்பட்ட மகளிர் கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
புதுப்பிக்கப்பட்ட மகளிர் கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
புதுப்பிக்கப்பட்ட மகளிர் கழிப்பறை பயன்பாட்டிற்கு திறக்க கோரிக்கை
ADDED : ஏப் 16, 2025 01:41 AM

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆணைக்குன்னம் ஊராட்சி. இப்பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
இப்பகுதி மகளிர் பயன்பாட்டிற்காக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், கழிப்பறை வளாகம் கட்டப்பட்டது.
கழிப்பறை, குளியலறை, மின்மோட்டாருடன் கூடிய நீரேற்றும் அறை, தண்ணீர் தொட்டி மற்றும் துணி துவைக்கும் கல் ஆகிய வசதிகளுடன் இந்த வளாகம் கட்டப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்து, பயன்பாடின்றி இருந்தது.
அதனால், 15வது மானிய நிதிக் குழு திட்டம் 2023--24ன் கீழ், 1.20 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டது.
புதுப்பித்தல் பணி முடிந்த நிலையில், மகளிர் சுகாதார வளாகம் அருகே, புதிதாக மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமான பணி நடந்தது.
இதற்கான சிமென்ட் மூட்டைகளை பாதுகாக்கும் பணிக்கு, இந்த வளாகம் பயன்படுத்தப்பட்டது.
பணிகள் முடிவுற்று இரண்டு ஆண்டுகளாகியும், இந்த கழிப்பறை வளாகம், பெண்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
எனவே, புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்ட சுகாதார வளாகத்தை, பயன்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.